Monday 6th of May 2024 05:33:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆபிரிக்காவில் ஒரு இலட்சத்தை  நெருங்கிய கொரோனா மரணங்கள்!

ஆபிரிக்காவில் ஒரு இலட்சத்தை நெருங்கிய கொரோனா மரணங்கள்!


ஆபிரிக்காவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளன.

இன்று வியாழக்கிழமை வரை மொத்த மரணங்கள் 99,800 ஆக பதிவாகியுள்ளன..

ஆபிரிக்க கண்டத்தில் கொரோனா தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுடன் தொடர்புடைய மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

ஆபிரிக்காவின் மொத்த கொரோனா மரணங்களில் கிட்டத்தட்ட அரைவாசிக்கு அதிகமானவை தொன்னாபிரிக்காவில் பதிவாகியுள்ளன.

கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

தென்னாபிரிக்காவிற்கு அருகிலுள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக் மற்றும் மலாவி போன்ற நாடுகளிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட 501Y.V2 புதிய திரிவு கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக விரைவாகப் பரவிவரும் நிலையில் நாட்டில் கொரோனா இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது.

தொன்னாபிரிக்காவில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு வீதம் தற்போது 2.6% ஆக உள்ளது. இது சர்வதேச ரீதியில் பதிவாகியுள்ள 2.3% ஐ விட அதிகமாகும்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE